நடிகரும் இயக்குனருமான சசிகுமார், குற்றப்பரம்பரை நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு முன் இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாலா இதனை இயக்க திட்டமிட்டிருந்தனர். பின்னர் அதனை அவர்கள் கைவிட்டனர். நாவலின் காப்புரிமையைப் பாலாவிடம் இருந்து சசிகுமார் பெற்றுக் கொண்டார். இதில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த நிலையில், 'குற்றப்பரம்பரை' நாவலை தழுவி சசிக்குமார் விரைவில் வெப் தொடர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.