தமிழ்நாடு பகிர்மான கழகம் மற்றும் கன்னியாகுமரி மின் பகிர்மான வட்டம் ஆகியவை இணைந்து விவசாயிகளுக்கான மின் சிக்கனம், மின் திறன் மற்றும் மின் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நாகர்கோவிலில் நேற்று (மார்ச் 14) நடந்தது. கன்னியாகுமரி மின் மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் வேலப்பன் வரவேற்றார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ கலந்து கொண்டார்.