முதல்வர் ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் என். ஜி. ஓ. காலனியில் உள்ள இவான்ஸ் பள்ளியில் மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டி இன்று நடந்தது. இதில் #தலைவர்72 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் விதமாக, எழுத்து வடிவ 72 என்ற எண்ணின் மீது நின்றனர். இது பார்வையாளர்களை கவர்ந்தது.