கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் இருந்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து ஊட்டுவாழ் மடம் செல்வதற்காக ரயில்வே துறை சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கபாதை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இரவு நேரங்களில் இந்த சுரங்கப்பாதையில் செல்வதற்கு மின்விளக்கு வசதி இல்லாத நிலை இருந்து வருகிறது. இருளில் மூழ்கிக் கிடக்கும் சுரங்கப்பாதையில் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.