நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழாக்கி வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதிகள்" என்று தெரிவித்தார்.
இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து நாகர்கோவிலில் அமைந்துள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முன்பு மாநகர திமுக சார்பில் தர்மேந்திர பிரதான் புகைப்படத்தை கிழித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.