கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் இன்று(மார்ச் 7) பா. ஜ. க சார்பில் சமக்கல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கத்தை விளவங்கோடு முன்னாள் எம். எல். ஏ விஜயதாரணி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பா. ஜ. க மாவட்ட பொருளாளர் முத்துராமன், பா. ஜ. க கவுன்சிலர்கள் ரோஸிட்டா திருமால், சுனில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.