ஸ்ரீ பெரும்பதூர் - Sri Perumbadhur

நீர்நிலை பகுதிகளில் சுற்றி வரும் மயில்கள்

நீர்நிலை பகுதிகளில் சுற்றி வரும் மயில்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில், மருதம், மலையாங்குளம், குண்ணவாக்கம், இடையாம்புதூர், காவணிப்பாக்கம், பட்டா, பேரணக்காவூர் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இப்பகுதிகளில் வன விலங்குகள் மட்டுமின்றி சமீப காலமாக மயில்கள் கூட்டம் அதிகரித்துள்ளன. இதேபோன்று, எடமச்சி, பினாயூர், காவணிப்பாக்கம், மதுார், சிறுதாமூர், பழவேரி, பாலேஸ்வரம் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளிலும் மயில்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மயில்கள் தண்ணீர் தேடி, விவசாய நிலங்கள் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் வருவதால் அவற்றின் பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளது. இதுகுறித்து பட்டா கிராம விவசாயிகள் கூறியதாவது: காவணிப்பாக்கம், பட்டா உள்ளிட்ட காப்பு காடுகளிலும், பினாயூர், பழவேரி கிராமங்களில் மலை, மலை சார்ந்த இடங்களிலும், மயில்கள் அதிக அளவில் உலா வருகின்றன. இப்பகுதிகளை சுற்றிலும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் உள்ளன. எனினும், நீர்நிலைகள் அருகாமையில் பல பகுதிகளிலும், கல்குவாரி மற்றும் கிரஷர் இயங்குவதால், அச்சத்தத்தால் அத்தொழிற்சாலைகளை கடந்து ஏரி மற்றும் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு, தண்ணீருக்காக மயில்கள் செல்ல முடிவதில்லை. இதனால், குடியிருப்பு பகுதி மற்றும் வீட்டுத் தோட்டங்களையும் மயில்கள் சுற்றுவதை காண முடிகிறது என இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా