காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு

60பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டசபை மதிப்பீட்டு குழு ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சட்டசபையின் மதிப்பீட்டு குழு, அதன் தலைவர் காந்திராஜன் தலைமையில் நேற்று (செப்.13) ஆய்வு செய்தது. குழுவின் உறுப்பினர்களான அருண்குமார், உதயசூரியன், கருமாணிக்கம், சதன் திருமலைகுமார், சின்னதுரை, ராமச்சந்திரன், மணியன், வெங்கடேஸ்வரன் ஆகிய எட்டு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். முதலில், ஏகாம்பரநாதர் கோவிலில் 24.5 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் திருப்பணிகளை இக்குழு பார்வையிட்டது. அங்கு நடக்கும் திருப்பணி பற்றி ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தது.

அப்போது, கோவில் பக்தர்கள் டில்லிபாபு மற்றும் தினேஷ் ஆகியோர், கோவிலில் நடக்கும் திருப்பணி தொடர்பாகவும், உபயதாரர்கள் விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என குழு தலைவர் காந்திராஜனிடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து, செங்கழுநீரோடை வீதியில், 4.6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் நேரு மார்க்கெட் பணிகளையும், கிழக்கு ராஜவீதியில் இயங்கும் ரேஷன் கடையில் பொருட்கள் பற்றியும் ஆய்வு செய்தனர்.

மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் பணியையும், அய்யம்பேட்டையில் கலைஞர் கனவு இல்லம் திட்ட வீடுகளையும் இக்குழு பார்வையிட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி