காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து 6 சவரன் திருட்டு!

59பார்த்தது
காளியம்மன் கோவில் பூட்டை உடைத்து 6 சவரன் திருட்டு!
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் குப்பத்தில், காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், பூஜை முடிந்து, 6: 00 மணிக்கு கோவில் பூசாரி கோவிலை பூட்டிச் சென்றார். இந்நிலையில், நேற்று(செப்.11) மதியம் அந்த வழியாக சென்ற அப்பகுதிவாசிகள், கோவில் வெளிப்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, கோவில் உள்ளே இருந்த இரண்டு பீரோக்களை திறந்து, அம்மனுக்கு அணிவிக்கப்படும் தாலி, கம்மல், செயின் உள்ளிட்ட, 6 சவரன் மதிப்பிலான நகை திருடு போயிருப்பதை அறிந்தனர். பின், சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வழக்குப்பதிந்து, கோவிலில் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


திருடிச் சென்ற மர்ம நபர்கள், அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த 'சிசிடிவி' கேமராக்களையும் உடைத்து அட்டூழியம் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி