ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தின் வீடியோ இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஒரு ரெக்கார்டிங் வீடியோவால் பலரின் இரண்டு மாத உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த திரை அனுபவத்தையும் கெடுக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.