காஞ்சிபுரம் மாநகராட்சியில் பயன்பாட்டில் இருந்த, 12, 000 குழல் விளக்குகளை அகற்றிவிட்டு, நகரில் உள்ள 51 வார்டுகளுக்கும், 12 கோடி ரூபாய் செலவில், புதிய எல்இடி விளக்குகள் கடந்தாண்டு பொருத்தப்பட்டது.
நகரின் இடங்களுக்கு ஏற்ற வகையில், 10, 60, 120 வாட்ஸ் என இந்த எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
முக்கிய வீதிகளிலும், நான்கு முனை சந்திப்புகளிலும் அதிக வாட்ஸ் கொண்ட பெரிய எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பொருத்தப்பட்டு ஒரு ஆண்டு மட்டுமே ஆன நிலையில், நகரின் பல இடங்களில் சரிவர எரிவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிதாக பொருத்தப்பட்ட எல்இடி விளக்குகள் முறையாக எரிய, மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.