

கூடுவாஞ்சேரியில் டயாலிசிஸ் சிகிச்சை மையம் திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டணமில்லா டயாலிஸிஸ் சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் ஆகியோர் துவங்கி வைத்தனர். தமிழகத்தில் முதல்முறையாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமார் 1-கோடி மதிப்பீட்டில் கட்டணமில்லா டயாலிசிஸ் சிகிச்சை மையம் திறக்கப்பட்டு உள்ளது. மொத்தம் ஐந்து படுக்கைகளுடன் 24 மணி நேரமும் மருத்துவர் மற்றும் செவிலியர் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.