மாமல்லபுரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் முப்பெரும் விழா இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 75 ஆம் ஆண்டு பொன் விழா, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் ரவிகுமார் எம்பி க்கு தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கியது என முப்பெரும் விழா பேரணி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செங்கை மற்றும் காஞ்சி மண்டல செயலாளர் கிட்டு தலைமையில் நடைபெற்றது, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து துவங்கிய பேரணியை மாநில துணைப் பொது செயலாளர் கனல்விழி மற்றும் செய்யூர் எம்எல்ஏ பாபு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அம்பேத்கரின் திரு உருவ சிலையையும் பானை சின்னம் குதிரை வண்டியில் வைத்து பரை இசை முழங்க ஊர்வலமாக மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று வடக்கு மாமல்லபுரத்தில் முடிவுற்றது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.