மதுராந்தகம்: ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பாக தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுவிப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். 

அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர் சங்கம் நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசு உடனடியாக இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி