கேரளா: பாலக்காடு அட்டப்பாடியில் தனது தாயின் தலையில் ஹாலோ பிளாக் கல்லால் தாக்கி மகன் கொலை செய்துள்ளார். அரளிகோணம் ஊரைச் சேர்ந்த ரேஷி (55) என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ரேஷியின் மகன் ரகு (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் இன்று (பிப்., 23) காலை நடந்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்த ரேஷியை ஹாலோ பிளாக் கல்லால் அடித்த நிலையில், ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். குடும்பப் பிரச்னையே கொலைக்குக் காரணம் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.