பல்லாவரம் - Pallavaram

பழமையான மரம் சாய்ந்து அப்புறப்படுத்திய பேரூராட்சி ஊழியர்கள்

காலையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் மழை மாமல்லபுரத்தில் பழமையான மரம் சாய்ந்து அப்புறப்படுத்திய பேரூராட்சி ஊழியர்கள் தமிழகத்தில் கோடை காலம் துவங்கியது முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் கடந்த 4 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் துவங்கி நடைபெற்று வரும் வேளையில் வெயிலின் தாக்கம் என்றும் இல்லாத அளவில் உச்சத்தை எட்டியது குளம் - நீர் நிலைகள் வரண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென் மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகிறது. நான்கு நாட்களுக்கு பரவலாக கணமழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் இன்று காலை முதல் மிதமான மழை ஆங்காங்கே பொழிந்து வருகிறது அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கல்பாக்கம் திருப்போரூர் மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் பழமையான மரம் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறானது தகவல் அறிந்த பேரூராட்சி ஊழியர்கள் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர் காலையிலிருந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வீடியோஸ்