செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உத்தரவின்படி கடப்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 1500 மாணவர்களுடன் காவலர்கள் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள் போதைதவிர் நல்ல கல்வி என்னும் பாதையில் நிமிர், குடிக்காதே குடிக்காதே, புகையிலை நமக்குப் பகையிலை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், காவலர்களும் இணைந்து கடப்பாக்கம் முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.