திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'அப்பா' என்ற செயலியை அறிமுகப்படுத்தியது என்பது 'பிராண்டு' செய்வது போல உள்ளது. ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று பொதுமக்கள் அழைத்தது இயற்கையாக அமைந்தது. ஆனால் 'அப்பா' என்ற உறவு முறையை மனதார அழைக்க வேண்டுமே ஒழிய 'பிராண்டு' செய்வது ஆகாது” என்றார்.