சதுரங்கப்பட்டினத்தில் தீ விபத்து கடை உரிமையாளருக்கு நிவாரணம்

55பார்த்தது
சதுரங்கப்பட்டினம் பஜார் வீதியில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்ட கடை உரிமையாளருக்கு வணிகர் சங்கம் சார்பில் நிவாரண உதவி வழங்கினார். வணிகர் சங்க பேரமைப்பின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரபாகர் வழங்கினார். 

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பஜார் வீதியில் உள்ள ஜே பி காம்ப்ளக்ஸில் ஷேக்நூர் என்பவர் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ரத்த பரிசோதனை நிலையத்தில் இருந்த பரிசோதனை செய்யும் கருவியுடன், ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. 

வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு தெற்கு மாவட்ட வணிகர் சங்கம் சார்பில் நிவாரண உதவி வழங்க முடிவு செய்து முதல் தவணையாக ரூபாய் 25,000 ஐ தமிழ்நாடு மாநில வணிகர் சங்க பேரமைப்பின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரபாகர் புதுப்பட்டினம் வணிகர் சங்க தலைவர் காதர் உசேன் ஆகியோர் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளரிடம் வழங்கினர். இதில் சதுரங்கப்பட்டினம் வியாபாரிகள் சங்க தலைவர் நாராயணமூர்த்தி செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி