மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் த. வெ. க. கட்சியின் ஆண்டு விழா, தலைமை பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், கட்சி தலைவர் நடிகர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்.
நடிகர் விஜய்-யின் தமிழக வெற்றி கழகம் தொடங்கி, ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு அக்கட்சின் ஆண்டு விழா மற்றும் கட்சியின் பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பூஞ்சேரியில் உள்ள போர்பாயிண்ட் ஷெரட்டன் நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து த. வெ. க. பொதுக்குழு மற்றும் ஆண்டு விழா நடத்துவதற்கு அந்த ஓட்டலில் கூட்ட அரங்கு மற்றும் பார்க்கிங் ஏரியா பகுதிகளை த. வெ. க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ்அர்ஜூன், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் வந்து பார்வையிட்டு சென்றதாகவும், அதிக வாகனங்கள் நிருத்துமிட வசதி, 5000 பேர் அமரும் வசதி உள்ள ஓட்டல் என்பதால் இதனை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுவில் கட்சி தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகள் மத்தியில் பேச உள்ளதாகவும், 2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் பற்றி கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.