செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் அகமதுநகர் அருகே இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் நலச்சங்கத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவர் (ரியல் எஸ்டேட்) கிங் உசேன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத்தரகர் நலச்சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் விருகை கண்ணன் மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் - மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளருமான ப. அப்துல் சமது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சங்கத்தின் தலைமை அலுவலகத்தை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றி வைத்ததுடன் சங்க கொடியினை ஏற்றி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தலைவர் கண்ணன் நிலம் வாங்குபவர்களும் நிலங்களை விற்பவர்களும் மிகவும் சிரமப்பட்டுதான் வாங்குகிறார்கள்- விற்பனை செய்கிறார்கள் நிலத்தரகர்கள் அவர்களிடம் கமிஷன் தொகையை இவ்வளவு வேண்டும் என வற்புறுத்தக்கூடாது அனுசரித்துசெல்லவேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசியவர் நிலத்தரகர்கள் மற்றும் பில்டர்ஸ் - டெவலப்பர்ஸ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவ வேண்டும் எனவும் விளிம்புநிலையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கல்வியினை பெற்றுத்தர வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.