ஜம்மு-காஷ்மிர்: மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்கு பக்தர்களுடன் சென்ற பேருந்து மாண்டா பகுதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்தனர். விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பேருந்துக்குள் சிக்கியிருந்த பலரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான சரியான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை. விசாரணை நடந்து வருகின்றது.