மதுராந்தகத்தில் பனிப்பொழிவால் விவசாயம் கடுமையாக பாதிப்பு

73பார்த்தது
வரலாறு காணாத பனிப்பொழிவால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு முதலை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் போன்ற பகுதிகளில் கடந்த 10 நாட்களாக இதுவரை இல்லாத அளவில் வரலாறு காணாத பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு விவசாயிகள் பயிர் செய்த நெல், தர்பூசணி, காய்கறிகள் போன்றவை யாவும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் பயிர் ஏக்கருக்கு 25 முதல் 30 ஆயிரம் செலவு செய்தும், தர்பூசணி மற்றும் காய்கறிகள் ஒரு ஏக்கருக்கு சுமார் 50 ஆயிரம் வரை செலவு செய்து பயிர் செய்திருந்த நிலையில், இந்த பனிப்பொழிவால் மாடல் நோய், கருகல் நோய் தாக்குவதாகவும், நெல் பயிர்கள் கதிர் விடும் சமயத்தில் பனிப்பொழிவால் நெல்மணி பிடிக்காமல் கதிர்கருகி வருகிறது. இதுபோல காய்கறிகளும் தர்பூசணியும் பூ எடுக்க முடியாமலும், காய் பிடிக்க முடியாமலும், நோய் தொற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டாவது போட்ட முதலோடு குறைந்த லாபத்தை பெற்றோம். ஆனால் இந்த ஆண்டு முதலீடு செய்த செலவு கிடைப்பதில் மிகச் சிரமம். இதனால் அடுத்த ஆண்டு பயிர் வைக்கும் முடியாத நிலை ஏற்படும். ஆகவே, அரசாங்கம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச முதலீடு செய்த பணத்தையாவது நிவாரணமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி