திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
அஇஅதிமுக 53-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலைமையில் நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சீனிவாசன், அதிமுக செய்தி தொடர்பாளரும், கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளருமான சிவசங்கரி, தலைமை கழக பேச்சாளர் துகிலி நல்லுசாமி, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் கூட்டத்தில் பேசியவர்கள் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு எடுத்த கூறினர். தற்போது நடைபெறுவது குடும்ப ஆட்சி என்றும் தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது என்றும் அதை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் மக்களுக்கு எதிரான பிரச்சனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்றாலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்து எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதலமைச்சராக்குவோம் என சூலுரைத்தனர்.