செங்கல்பட்டில் முதல்வர் மருத்துவக் கிழமை ஆட்சியர் ஆய்வு

77பார்த்தது
முதல்வர் மருந்தக கிடங்கினை கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டான் கொளத்தூர் ஒன்றியம் ஆத்தூர் பகுதியில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மாவட்ட மருத்துவ சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மருந்தகங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் 24ஆம் தேதி துவங்கி வைக்க உள்ள நிலையில் கட்டமைப்பு பணிகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற இயக்குனருமான ராகுல்நாத், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் நாராயண சர்மா பயிற்சி ஆட்சியர் மாலதி ஹெலன் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் நந்தகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவித்ததாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்டமாக அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 36 இடங்களில் முதல்வர் மருந்தகம் துவங்கப்பட உள்ளது. அதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. மருந்துகள் 20 முதல் 70% வரை தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி