மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் நிலையத்திற்கு சீல்
சொத்து வரி பாக்கியுள்ளதால் நகராட்சி நடவடிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் நிலையத்தில் கடந்த ஓராண்டு மேலாக சொத்து வரியானது சுமார் 1. 5 லட்சம் பாக்கி நிலுவையில் உள்ளதால் இதை வசூலிக்க பலமுறை நகராட்சி மூலம் தெரிவித்து இதுவரை சொத்து பாக்கி கட்டாததால் மதுராந்தகம் நகராட்சி ஆணையர் அபர்ணா தலைமையில் பெட்ரோல் பங்குக்கு சீல் வைக்கப்பட்டது.