மதுராந்தகத்தில் அரசு பேருந்து விபத்து போலீசார் விசாரணை

76பார்த்தது
முன்னாள் சென்ற பேருந்தை முந்த முயன்ற போது அரசு பேருந்து விபத்துல்லாது ஓட்டுநர் தப்பி ஓட்டம்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கால்நடை மருத்துவமனை எதிரே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூரில் இருந்து கிளாம்பாக்கம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன்னாள் சென்ற பேருந்தை முந்த முயன்ற போது அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடிய கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது இதில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இவர்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் பேருந்து விபத்துக்குள்ளான உடன் அரசு பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடியதால் பயணிகள் செய்வதறியாது தவித்து நின்றனர் தகவல் இருந்து அங்கு வந்த மதுராந்தகம் போலீசார் பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி