மதுராந்தகம் அருகே
பாக்கம் அரசு பள்ளியில் நூற்றாண்டு விழாவில் பள்ளிக்கு ஐந்து லட்சம் மதிப்பீட்டில் பொருட்கள் வழங்கி தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்த
முன்னாள் மாணவர்கள்
செய்த செயல் அப்பகுதி
பொதுமக்களிடையே
நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அருகே உள்ள
பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
முன்னாள் மாணவர்கள் பள்ளி மேலாண்மை குழு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள்
ஒன்றிணைந்து பள்ளிக்கு வாழை தோரணங்கள் கட்டி பஞ்சவர்ணங்கள் பூசி , பிள்ளைகளின் கண் கவர் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் பேச்சுப்போட்டு என பள்ளியின் நூற்றாண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் முன்னாள் மாணவர்கள் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் நாற்காலி, நகலெடுப்பான் பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கினர் பின்பு முன்னாள் மாணவர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தது நெகிழ்ச்சிய. யை ஏற்படுத்தியது.
பின்பு கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு
பரிசளிப்பு விழா
தலைமை ஆசிரியர்
உஷா தலைமையில் வழங்கப்பட்டது.