முகையூர் கிராமத்தில் பனையேறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
கூவத்தூர் அடுத்த முகையூர் கிராமத்தில் பனையேறி தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த முகையூர் கிராமத்தில் பனையேறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமியிடம் நேற்றைய தினம் தமிழக காவல்துறை அநாகரிகமாக நடந்து கொண்டதற்க்காகவும் வயது மூப்பை துளியும் எண்ணாத காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக கண்டன கோஷம் எழுப்பினர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பனையேறி தொழிலாளர்கள் எங்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தமிழ்நாடு கள் இயக்க தலைவர் ஐயா நல்லசாமியை தமிழக காவல்துறை இவ்வாறு அநாகரிகமாக நடத்தி இருக்கக் கூடாது என்றும் அவருடைய வயதையும் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்தவர் என்கின்ற எந்த ஒரு நிலையையும் அறியாமல் தமிழக காவல்துறை இவ்வாறு செய்திருப்பது கண்டனத்திற்குரியது எனவும் இதற்கெல்லாம் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் என கூறினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட பனையேறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி