திருப்போரூர் அடுத்த படூரில் உள்ள தனியார் கல்லூரியில்
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது,
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த படூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
மாவட்ட ஆட்சியர்
அருண்ராஜ், தலைமையில் நடைபெற்றது,
இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 20, 000 காலி பணியிடங்களுக்கு நிரப்பிட தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை, நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு
பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ், வழங்கினார்,
இவ் விழாவில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, சார் ஆட்சியர் மாலதி ஹெலன், மண்டல இணை இயக்குனர் தேவேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தணிகைவேலு, படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.