செங்கல்பட்டில் வாழைகுலை மற்றும் பழங்களை அள்ளிச் சென்ற மக்கள்

67பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பிரம்மாண்டமாக ரோட் ஷோ நடைபெற்றது இதில் தமிழக முதல்வர் சாலையில் நடந்து சென்று அப்பகுதி மக்களிடம் மனுக்களை நேரடியாக பெற்றார்

அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் 497 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 5 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் மேலும் 280 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் பின்பு ஏழை எளிய மக்களுக்கு 508 கோடியே 3 லட்சத்தில் 59, 606 பணியாளர்களுக்கு பட்டா தடை தமிழக முதல்வர்
மு. க ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார்.

அப்போது அவரை கவரும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சுமார் 300 மீட்டர் வரை வாழைமரம் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவாயில் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்த நிலையில் விழா முடிந்ததுமே பல்வேறு பகுதியில் இருந்து வருகை புரிந்து இருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டும் முந்தியடித்துக் கொண்டும் அங்கு முதல்வரை கவரும் வகையில் வைக்கப்பட்டிருந்த பழங்களை அள்ளிச்சென்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி