தனியார் கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நடைப்பயணம்.!!
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே தனியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்
அந்த வகையில் கல்லூரி விடுதியில் தங்கி உள்ள மாணவ- மாணவியர்கள் சார்பில் மூத்த விடுதி காப்பாளர் செந்தில்குமார் ஏற்பாட்டில் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது
இந்த நடைப்பயணத்தை சிறப்பு அழைப்பாளராக
கல்லூரியில் விளையாட்டுத்துறை இயக்குனர் மோகன கிருஷ்ணன் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
போதை பொருளுக்கு அடிமையாவதன் விளைவாக மாணவர்கள் உடல் மற்றும் மனநல பாதிப்புகளை சந்திக்க நேரிடுவதோடு கல்வி தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையிலும் பெரும் பின்னடைவை அனுப்பி வைக்க நேரிடுகிறது இதனால் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் எஸ்ஆர்எம் குழுமத்தில் விடுதியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சிக்கு மருந்து வேண்டாம் , மன அமைதி போதும், உயிருக்கு உயிராக கல்வி போன்ற பதாகைகளை ஏந்தி கொண்டு கல்லூரி வளாகத்தில் ஊர்வலமாக நடந்து சென்று போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.!!
இந்த நிகழ்வில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானவர் பங்கேற்றனர்.!!