செங்கல்பட்டு டவுன் - Chengalpattu Town

சிறுபாலம் தடுப்புச்சுவர் அமைக்க வளத்தோட்டத்தினர் கோரிக்கை

சிறுபாலம் தடுப்புச்சுவர் அமைக்க வளத்தோட்டத்தினர் கோரிக்கை

காஞ்சிபுரம் ஓரிக்கை வசந்தம் நகரில் இருந்து, வளத்தோட்டம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில், மழைநீர் கால்வாய் குறுக்கிடும் இடத்தில் சிறுபாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த சிறுபாலத்திற்கு இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. தெரு மின்விளக்கு வசதியும் இல்லாததால், இரவு நேரத்தில் சிறுபாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், வளத்தோட்டம் பிரதான சாலையில் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా