செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரியின் மதகை சரி செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பநல்லூர் கிராமத்தில் 800 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது.
இந்த ஏரியை நம்பி அக்ராமத்தை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த ஏரியின் மதகு பழுதடைந்து ஏரியில் உள்ள உபரிநீரானது வீணாக கால்வாய் மூலம் வெளியேறி வருகிறது.
இதனால் இக்கிராமத்தில் விவசாயிகள்
மூன்று போகம் விவசாயம் செய்ய முடியாத அவல நிலையானது ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்த மதகினை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் பலமுறை மனு அளித்தும் இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே விவசாயிகளின் நலன் கருதி இந்த பாப்பநல்லூர் கிராமத்தில் உள்ள ஏரியினை துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு இந்த ஏரியில் பழுதடைந்து உள்ள மதகினை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர்.