கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய இயக்குனருடன் எம்பி சந்திப்பு

59பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் நரியத்தில் உள்ள விடுதியில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் சந்திர சேகர கர்ஹாட் கரை காஞ்சிபுரம் எம்பி செல்வம் சந்தித்து பேசினார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேஜி எனப்படும் கிண்டர் கார்டன் மழலையர் துவக்கப் பள்ளியை நிர்வாகம் திடீரென மூடியது அதற்கு பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது மீண்டும் கே ஜி பள்ளியை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர் அதனடிப்படையில் காஞ்சிபுரம் எம்பி செல்வம் இன்றைய தினம் கல்பாக்கம் நகரியத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனரை சந்தித்து பொதுமக்களின் கருத்துக்களை எடுத்து கூறினார் குறிப்பாக கே ஜி பள்ளியை திறக்க வேண்டும் என்றும் கிரேட் 4 என சொல்லக்கூடிய மத்திய அரசு பணிகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிலா கமிட்டியை ரத்து செய்ய வலியுறுத்தியும் பேசினார்.
கூட்டத்தில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய பெருந்தலைவர் அரசு துணைத் தலைவர் பச்சையப்பன் திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் சரவணன் மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து , மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி