மொளச்சூர் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை கொண்டு வந்த மக்கள்

85பார்த்தது
மொளச்சூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கல்வி சீர் பொருட்களை மக்கள் ஊர்வலமாக கொண்டு சென்று வழங்கினர்.



காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை 100 கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியின் 93 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளியை மேம்படுத்தும் வகையில் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள், பெற்றோர்கள் இணைந்து ரூ. 50 ஆயிரம் மதிப்பில், பள்ளிக்கு தேவைப்படும், நோட்டு, புத்தகம், பென்சில், பேனா, பீரோ, நாற்காலிகள், குடிநீர் கேன்கள், மின்விசிறி, குக்கர் உள்ளிட்ட 40 வகையான பள்ளி உபகரணங்களை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று பள்ளி தலைமை ஆசிரியர் இருதயராஜிடம் வழங்கினர். நிகழ்வில் ஊராட்சித் தலைவர் சித்ரா, துணைத் தலைவர் ரஞ்சினி ஆலிஸ் ஜெரால்ட், கல்வி மேலாண்மை குழு தலைவர் நதியா ரபிக் அகமது உள்பட பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி