சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற 108 திவ்விய தேசங்களில் 61வது திவ்விய தேசமான திருநீர்மலை ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் ஜனாதிபதி அருள்மிகு நீர்வண்ண பெருமாள் பங்குனி பிரமோற்சவ தேர் திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. , நாள்தோறும் சிறப்பு பூஜைகள், கருடசேவை நடைபெற்ற நிலையில் 8ஆம் நாள் திருவிழாவாக நீர்வண்ண பெருமாள் பங்குனி பிரம்மோற்சவ தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ரங்கநாத பெருமாள் வீற்றிருக்க, காலை திருநீர்மலை கோயில் அடிவாரத்தில் உள்ள ஊர் முழுவதும் சுற்றிலும் தேர் பவனி நடைபெற்றது.
இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்களுடன் வடம்பிடித்து இழுத்து சென்றனர். திருநீர்மலையை சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் அடிவாரம் வரை வந்து நிலை நின்றது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மு.கரு.முத்துராஜா தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, காவல்துறையினர், தீயணைப்பு, மின்சாரத்துறையினர் உள்ளிட்டோர் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் மாறிக்கொண்டு கலந்துகொண்டு பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று சென்றனர்.