உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து. இது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. கிரீன்லாந்தின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டுள்ளது. நிலப்பரப்பில் சிறிய பகுதி மட்டுமே வாழக்கூடிய வகையில் உள்ளது. கிரீன்லாந்தின் பூர்வக் குடியினரை 'இனுயிட்' என்கின்றனர். 2,166,086 சதுர கி.மீ. பரப்பளவில், அறுபதாயிரம் பேர் மட்டுமே வாழ்கின்றனர். டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருந்தாலும், தீவை ஆளுவது கிரீன்லாந்து அரசுதான்.