கண்களை ஈரப்பதமாக வைக்க, கண்களில் இருக்கும் குப்பையை அகற்ற, கண்ணீர் படலம் சரி செய்ய கண்கள் தன்னைத்தானே சிமிட்டிக்கொள்கிறது. ஆனால், ஒரு நபர் நிமிடத்திற்கு எத்தனை முறைகள் கண்களை சிமிட்டுகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு தனிநபர் ஒரு நிமிடத்திற்கு குறைந்தது 14 முதல் 17 முறை கண்களை சிமிட்டுகிறார். ஒரு மணிநேரத்திற்கு 840 முதல் 1020 முறைகள் வரை ஆகும்.