மறைமலைநகர் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர் பேரணி

53பார்த்தது
மறைமலைநகர் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி: தாம்பரம் போக்குவர துணை ஆணையர் சமய் சிங் மீனா பங்கேற்பு.!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தனியார் நிறுவனம் மற்றும் போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது

போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ராஜன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணையில் தாம்பரம் போக்குவரத்து காவல் துணை ஆணையர் சமய் சிங் மீனா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார் மேலும் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி அவர்களிடம் தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை எடுத்துக் கூறி இலவசமாக அனைவருக்கும் தலைக்கவசத்தை வழங்கினார்

இந்த நிகழ்வில் மறைமலைநகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஹேமத்துக்குமார், காவல் உதவி ஆய்வாளர்கள் லோகேஷ் காந்தி, தனபால், பெருமாள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்

சுமார் ஐந்து கிலோ மீட்டர் அளவில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது இதில் தனியார் நிறுவனத்தைச் சார்ந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை பொதுமக்கள் முன் எடுத்துக் கூறி பதாகைகள் ஏந்தியபடி ஹெல்மெட் அணிந்து கொண்டு இருச்சக்கர வாகனத்தில் பேரணி நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி