வீராணக்குன்னம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்
மழையில் நனைந்த நெல் மூட்டைகள் முளைக்கும் தருவாயில் இருப்பதால் விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பரவலாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழையானது பெய்தது.
இந்த மழையின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வீராணக்குன்னம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் நனைந்த நிலையில் மழை பொழிவு முடிந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் இந்த மூட்டையினை அரசு அதிகாரிகள் மற்றொரு கோணியின் மாற்றாததால் தற்பொழுது அந்த நெல் மூட்டையில் உள்ள நெல்கள் முளைக்கும் தருவாயில் உள்ளது.
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் முளைத்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.