செங்கல்பட்டு டவுன் - Chengalpattu Town

காட்டுதேவத்துார் ஏரி கால்வாயில் கழிவுநீர் கலக்கும் லாரிகள்

காட்டுதேவத்துார் ஏரி கால்வாயில் கழிவுநீர் கலக்கும் லாரிகள்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே காட்டு தேவத்துார் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் வாயிலாக, 500 ஏக்கர் வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது. இந்த ஏரி, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. காட்டுதேவத்துார் ஏரியில் இருந்து கலங்கல் வாயிலாக வெளியேறும் உபரி நீர், கால்வாய் வழியாக விளங்கனுார், குருவாபதன்மேடு, ஓணம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக சென்று, இரும்பேடு ஏரிக்கு செல்கிறது. இரும்பேடு ஏரி மற்றும் உபரிநீர் கால்வாய் அருகே, ஐந்துக்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள் உள்ளன. இந்நிலையில், தனியார் லாரிகள் வாயிலாக குடியிருப்புகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீர், அத்துமீறி ஏரி உபரிநீர் கால்வாயில் விடப்படுகிறது. உபரிநீர் கால்வாயில் கலக்கப்படும் கழிவுநீர் தண்ணீரில் கலந்து, குடிநீர் கிணறுகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால், அப்பகுதிவாசிகளுக்கு குடிநீர் வாயிலாக தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஏரி உபரிநீர் கால்வாயில் கழிவுநீர் கலக்கும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా