மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை திட்டத்தில் ரூபாய் 4, 000 கோடி நிதியை விடுவிக்க கோரி மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு ஒன்றிய பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெய்க்குப்பி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலைக்கு உண்டான பணத்தை வழங்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது. இதில் 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக வேலை செய்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பது குறித்தும் தமிழகத்தை மட்டும் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பியதுடன் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் எங்களுக்கு உண்டான சம்பளம் எங்கே என்று கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.