செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகின்ற மே 5 ஆம் தேதி தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு 42வது வணிகர் தினம் வணிகர் அதிகார பிரகடன மாநாடாக நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறுவதற்கான அரங்கம் அமைக்கும் பணிக்கான பந்தல் கால்கோள் விழா நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா அவர்கள் கலந்துகொண்டு தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் முவர்ணக் கொடியை ஏற்றிவைத்து மாநாடு நடைபெறும் அரங்கம் அமைப்பதற்கான பந்தல் கால்கோள் எடுத்து வைத்து நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார்.