ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப். 13) நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது. அந்த அணியின் விராட் கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். பின்னர் 2 ரன்கள் ஓடிய அவர் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனிடம் சென்று, ’என் இதயத்துடிப்பை பரிசோதனை செய்' என கூற சஞ்சுவும் சரிபார்த்து சீராக இருப்பதாக சொன்னார். மைதானத்தில் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்துகின்றன.