திருக்கழுக்குன்றம் அடுத்த முடையூர் பகுதியில் உள்ள ஜார்ஜ் வேணுகோபால் நடுநிலை பள்ளியின் 75 ஆம் ஆண்டு பவளவிழா வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட முடையூர் கிராமத்தில் 1950 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த செல்வநாயகம் என்பவரால் துவங்கப்பட்டது இந்நிலையில் இப்பள்ளியின் 75 ஆம் ஆண்டு பவளவிழா வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் தற்போது மக்கள் பிரதிநிதிகளாகவும், தொழிலதிபராகவும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் என பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர் மேலும் பல்வேறு ஆண்டுகளில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னாள் ஆசிரியர்கள் இந்நாள் ஆசிரியர்கள் என அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் தங்களுடைய கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். முன்னதாக பள்ளியின் 75 ஆம் ஆண்டு பவள விழாவுக்கான கல்வெட்டு திறந்து வைத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சுகந்தி, தலைமை ஆசிரியர் கருணாமூர்த்தி முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள், மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.