பழங்கள், இலைகளை சாப்பிட்டு கம்பளிப்பூச்சி வாழ்கிறது. கம்பளிப்பூச்சிக்கு 12 கண்கள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், கம்பளிப்பூச்சியின் உடலில் 12 கண்கள் இருக்கின்றன. அதனை ஒசெல்லி என அழைப்பார்கள். இந்த கண்கள் அதன் தலையின் ஒவ்வொரு பக்கத்திலும் 6 என இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு இருக்கும். இது ஒளியின் இயக்கத்தை கவனிக்க உதவுகிறது. ஆனால், மனிதர்களின் கண்களைப்போல தெளிவான பார்வை இருப்பதில்லை.