மறைமலைநகர் அருகே மொபைல் திருடிய வழக்கில் 4 பேர் கைது

80பார்த்தது
மறைமலைநகர் அருகே மொபைல் திருடிய வழக்கில் 4 பேர் கைது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பேரமனூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 27. தனது நண்பர் அர்ஜூன் என்பவருடன் வசித்து வருகிறார்.

இருவரும் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பாலாஜி வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தார். மீண்டும் எழுந்து பார்த்தபோது அறையில் இருந்த 'ஒப்போ' மற்றும் 'ரியல் மீ' இரண்டு மொபைல்போனை மர்ம நபர்கள் திருடிக் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பாலாஜி மறைமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில் மொபைல் போன் திருட்டில் ஈடுபட்ட வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த மகேந்திரன், 27. முருகன், 27. ஆகிய இருவரையும், திருடிய மொபைல்போனை வாங்கிய குடியாத்தம் வீரபத்திரன், 26. அண்ணாமலை, 32. உள்ளிட்டோரையும் கைது செய்து விசாரணைக்கு பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி