செங்கல்பட்டு டவுன் - Chengalpattu Town

காஞ்சியில் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பையால் சீர்கேடு

காஞ்சியில் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பையால் சீர்கேடு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 37,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து கொட்டப்படும் குப்பைக் கழிவுகளை, தூய்மைப் பணியாளர்கள் வாயிலாக சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள், காஞ்சிபுரம் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின், மக்கும் குப்பை, மக்காத குப்பை என, தரம் பிரிக்கப்படுகிறது.  பின், உரமாகவும், மறுசுழற்சி செய்யப்பட்ட குப்பையாகவும் மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரூராட்சிக்குட்பட்ட குப்பைநல்லூர் பகுதியில், குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, காவனூர் - புதுச்சேரி செல்லும் சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், குப்பையில் இருந்து நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.  மேலும், காற்று வீசும் நேரங்களில் பறக்கும் குப்பை, அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் மீது விழுந்து இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே, சாலையோரத்தில் குப்பைக் கொட்டுவதைத் தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా