வீராணக்குன்னம் ஊராட்சி ஆரம்ப பள்ளியில் நூற்றாண்டு நிறைவுவிழா

64பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் வீராணக்குன்னம் கிராமம் ஊராட்சி ஓன்றிய ஆரம்ப பள்ளியில் நூற்றாண்டு நிறைவு விழா பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் குரு சாத்ராக் தலைமையில் நடைபெற்றது. 

இதில் 1907-2025 முன்னாள் மாணவர்கள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை மற்றும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஆகியவற்றை முன்னாள் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர் அமுதா மற்றும் மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கே. கீதா கார்த்திகேயன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவை திறந்து வைத்தார். 

இதனைத் தொடர்ந்து பள்ளியில் முதலாம் ஆண்டு சேர்க்கும் மாணவர்களுக்கே பள்ளி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பாக காமராஜர் கல்வி அறக்கட்டளையை துவக்கி, மாணவ மாணவிகளுக்கு நற்பண்புகள் யோக கலை, இசைப் பயிற்சி, சிலம்பாட்டம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி